184 சீன இணையதளங்களுக்கு சவுதி அரசு தடை விதித்துள்ளது

போலியான சலுகைகளை வழங்கிக் கொண்டிருந்த சுமார் 184 சீன இணையதளங்களுக்கு சவுதி அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2021-03-11 14:16 GMT
Image Credit: Stock Image
ரியாத்

உலக அளவில் சமீப காலங்களில் வலிமையான பொருளாதார நாடாக விளங்கிவருகிறது சீனா. இந்தியா உட்பட பல உலக நாடுகள் சீனாவின் பொருளாதார வளர்ச்சிப் பாதையைப் பார்த்து வியந்து அதை பின்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

உள்நாட்டு சந்தையை ஸ்திரப்படுத்தும் வகையிலும், முதலீடுகளைத் தொடர்ந்து தக்கவைக்கும் வகையிலும் சீன அரசு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவும், சவுதியும் சீனாவின் வர்த்தக வளர்ச்சிக்கு அடிக்கடி நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் கலப்படப் பொருட்கள் விற்பனை மற்றும் போலியான சலுகைகளை வழங்கிக் கொண்டிருந்த சுமார் 184 சீன இணையதளங்களுக்கு சவுதி அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து சவுதி ஊடகங்கள் தரப்பில் மோசமான மற்றும் போலியான சலுகைகளைக் கொண்டிருந்த சுமார் 184 சீன இணையதளங்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது. இம்மாதிரியான வணிக நோக்க இணையதளங்கள் ஒழுங்குமுறை அதிகாரிகளைத் தவறாக வழிநடத்துகிறது. இதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை சவுதி அரசு எடுத்துள்ளது” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளன.

இந்த இணையதளங்கள்  நுகர்வோருக்கு வருவாய் மற்றும் பரிமாற்றம் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை வழங்கத் தவறிவிட்டன, அதற்கு பதிலாக வாங்குபவர்களை வழங்கிய பொருட்களின் தரத்தில்  ஏமாற்றின. வாடிக்கையாளர் சேவையுடன் கடையின் தரவு, முகவரி மற்றும் தொடர்பு எண்களை வெளியிடவில்லை என்று அல் ஜசிரா பத்திரிகை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்