ஏமன் தலைநகர் சனா மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை சரமாரி வான்வழி தாக்குதல்

ஏமன் தலைநகர் சனா மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை சரமாரி வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. சனாவில் தாக்குதல் நடத்தப்பட்டதை சவுதி தலைமையிலான கூட்டுப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

Update: 2021-03-22 16:18 GMT
ரியாத்

சவுதி எண்ணெய் நிறுவனங்கள், விமான நிலையங்கள் மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்து ஹவுதி போராளிகள் நடத்தும் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது இதை தொடர்ந்து ஏமன் தலைநகர் சனா மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை சரமாரி வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. 

ஏமனில் ஹவுதி போராளிகளுடன் மோதலில் ஈடுபட்டு வரும் சவுதி தலைமையிலான கூட்டுப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை சனா நகரில் நடத்திய வான்வழி தாக்குதலில் ஏவுகணைகள், டிரோன்கள் தயாரிக்கும் பணிமனை மற்றும் வெடி மருந்து கிடங்கை தாக்கி அழித்ததாக தெரிவித்துள்ளது.வரவிருக்கும் நாட்களில் ஹவுதி சவுதி மீது நடத்தவிருக்கும் தாக்குதலை தடுப்பதற்கும், தாக்குதல் நடத்துவதற்கான ஆயுதங்களை அழிப்பதற்கும் மற்றும் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சவுதி தலைமையிலான கூட்டுப்படை குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்