ரஷியாவில் போர் விமானத்தை ஆய்வு செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் 3 விமானிகள் பலி

ரஷியாவில் புறப்படுவதற்கு முன் போர் விமானத்தை ஆய்வு செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் 3 விமானிகள் பரிதாபமாக உயரிழந்துள்ளனர்.

Update: 2021-03-23 14:54 GMT
Image courtesy : east2west news

மாஸ்கோ

மேற்கு-ரஷ்ய நகரமான கலுகாவிலே அணு குண்டுவீச்சு டியு 22 எம் 3 என்ற போர் விமானம்  புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்தது. அதற்கு முன் அதன் விமானிகள் 3 பேர்  விமானத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விமானம் திடீர் என ஓடத்தொடங்கியது . பின்னர் விமானம் மேலே பறக்க தொடங்கியது. 

இதனால், இருக்கையுடன் விமானிகள் மேல் நோக்கி பறந்தள்ளனர், குறைவான உயரம் என்பதால் பாராசூட் வேலை செய்யாமல் போயுள்ளது.தரையில் விழுந்த 3 விமானிகளும் படுகாயமடைந்து உயிரிழந்தள்ளனர். பாதுகாப்பு அமைச்சகம், விபத்து குறித்த மேலதிக தகவல்கள் ஏதும் வெளியிடவில்லை.

மேலும் செய்திகள்