தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவுடன் எந்த வர்த்தகம் இல்லை: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவுடன் எந்த வர்த்தகம் இல்லைஎன பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முடிவு செய்து உள்ளார்.

Update: 2021-04-03 08:02 GMT
படம்: AP
இஸ்லாமாபாத்: 

இந்தியாவில் இருந்து சர்க்கரை, பருத்தி மற்றும் பருத்தி நூல் இறக்குமதி செய்ய அனுமதிக்கும் பொருளாதார ஒருங்கிணைப்புக் குழு
  முடிவு குறித்து தனது அமைச்சரவை முக்கிய உறுப்பினர்களுடன்  பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.

 பின்னர் தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் இந்தியாவுடன் எந்தவொரு வர்த்தகத்தையும் முன்னெடுக்க முடியாது என்று பிரதமர் இம்ரான் கான் முடிவு செய்து உள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

பிரதமர் கான் தலைமையிலான அமைச்சரவை இந்தியாவில் இருந்து பருத்தியை இறக்குமதி செய்வதற்கான பொருளாதார ஒருங்கிணைப்புக் குழு
  முன்மொழிவை நிராகரித்தது. 

வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து முடிவை மீண்டும் க மாற்றியமைக்கும் வரை உறவுகளை இயல்பாக்க முடியாது என்று வலியுறுத்தினார். 

தேவையான பொருட்களின் இறக்குமதிக்கான மாற்று  வழிகளை கண்டுபிடிப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட துறைகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்சகம் மற்றும் அவரது பொருளாதார குழுவுக்கு பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்