கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: துபாயில், கடந்த மாதம் மட்டும் 11 வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டது; பொருளாதாரத்துறை தகவல்

துபாய் அரசின் பொருளாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

Update: 2021-04-05 22:14 GMT

துபாய் நகரில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை வர்த்தக நிறுவனங்கள் முறையாக கடைப்பிடிக்கிறதா? என தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில், கடந்த மார்ச் மாதம் மட்டும் 16 ஆயிரத்து 475 வர்த்தக நிறுவனங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காத 11 வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. மேலும் 252 வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 61 நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டது. மேலும் 98.1 சதவீத நிறுவனங்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றி வருவது தெரிய வந்தது.

துபாய் நகரில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்ட போது முக கவசம் அணியாமல் இருந்தது, சமூக இடைவெளியை பின்பற்றாமல் செயல்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படாத பட்சத்தில் பொதுமக்கள் பொருளாதாரத்துறைக்கு தொலைபேசி வழியாகவும், செயலி வழியாகவும், இணையதளம் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்