வடகொரியா தனது 3,000 டன் எடையிலான நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையை விரைவில் சோதிக்கும் - அமெரிக்கா, தென் கொரியாவின் உளவுத்துறை அதிகாரிகள் தகவல்

வடகொரியா தனது 3,000 டன் எடையிலான நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையை விரைவில் சோதிக்கும் என்று அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-04-11 20:54 GMT
கோப்புப்படம்
சியோல், 

வடகொரியா 3,000 டன் எடையில் உருவாக்கியுள்ள, கண்டம் விட்டு கண்டம் பாயும் முதல் நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையை விரைவில் சோதிக்கும் என அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

2019 ஜூலை மாதத்தில் 3,000 டன் நீர்மூழ்கிக் கப்பல் குறித்து வடகொரியா செய்தி வெளியிட்டிருந்தது. அந்த நீர்மூழ்கிக் கப்பல் ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுவிட்டது என தென் கொரியா மற்றும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தேசிய செய்தி ஊடகமான யோன்ஹாப் செய்தி நிறுவனம் (Yonhap News Agency) தெரிவித்துள்ளது.  

நீரில் மூழ்கக்கூடிய ஏவுகணை சோதனையை, ஒரு புதிய நிலைக்கு நகர்த்தியதாக வட கொரியா தெரிவித்துள்ளது. இது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணையாக (submarine-launched ballistic missile (SLBM) ) இருக்கலாம் என்று சோதனைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.  

இந்த சோதனையை சரியான சமயத்தில் செய்வதற்கான உகந்த நேரத்தை வட கொரியா மறுஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். வடகொரியாவின் இந்த நடவடிக்கை, அமெரிக்காவுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிப்பது உட்பட பல்வேறு விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 

மேலும் செய்திகள்