அபுதாபியில் கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த நடவடிக்கை பேரிடர் மேலாண்மை குழு தகவல்

அபுதாபியில் கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த நடவடிக்கை பேரிடர் மேலாண்மை குழு தகவல்.

Update: 2021-04-14 10:37 GMT

அபுதாபி,

அபுதாபி நெருக்கடி, அவசர சேவை மற்றும் பேரிடர் மேலாண்மை குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அபுதாபி பகுதியில் கொரோனா பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா பரிசோதனை செய்யும் மையங்களை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அபுதாபியின் அல் தனா, அல் ஜாஹியா, பனியாஸ், அல் சம்கா மற்றும் அல் சவ்மிக் உள்ளிட்ட இடங்களில் இந்த பரிசோதனை மையங்கள் செயல்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். பொது சுகாதாரத்தை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்