ரமலான் மாதத்தையொட்டி 213 சிறைக்கைதிகள் விடுதலை ராசல் கைமா ஆட்சியாளர் உத்தரவு

அமீரகத்தில் ரமலான் மாதம் தொடங்கியுள்ளது. இதனையொட்டி அமீரக அதிபர் உள்ளிட்ட பல்வேறு ஆட்சியாளர்களும் சிறைக்கைதிகளை நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ராசல் கைமா ஆட்சியாளர் மேதகு ஷேக் சவுத் பின் சகர் அல் காஸிமி 213 சிறைக்கைதிகளை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-04-14 10:44 GMT

ராசல் கைமா,

அமீரகத்தில் ரமலான் மாதம் தொடங்கியுள்ளது. இதனையொட்டி அமீரக அதிபர் உள்ளிட்ட பல்வேறு ஆட்சியாளர்களும் சிறைக்கைதிகளை நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ராசல் கைமா ஆட்சியாளர் மேதகு ஷேக் சவுத் பின் சகர் அல் காஸிமி 213 சிறைக்கைதிகளை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் சிறைக்கைதிகள் மனம் திருந்தி வாழ சமூகத்தில் இணைந்து செயல்பட உதவியாக இருப்பதுடன், தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து இருக்கவும் முடியும். ராசல் கைமா பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் சவுத் பின் சகர் அல் காஸிமி, ஆட்சியாளரின் உத்தரவை உடனடியாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்