அமெரிக்காவின் சிகாகோவில் 13 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் சிகாகோவில் போலீசாரால் 13 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Update: 2021-04-16 04:49 GMT
Image courtesy : dailymail.co.uk
சிகாகோ

அமெரிக்காவின் சிகாகோவில் போலீசாரால் 13 வயது சிறுவன்  சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தின் வீடியோ காட்சியை இரண்டு வாரம் கழித்து சிகாகோ போலீசார் வெளியிட்டுள்ளனர். ஒன்பது நிமிடம் ஓடக் கூடிய இந்த பாடி கேம் வீடியோ ஒரு காரில் இருந்து அந்த அடையாளம் தெரியாத காவல் அதிகாரி இறங்கி வருவதையும் ஆடம் டோலிடோ என்ற சிறுவனை மடக்கி கைகளை உயர்த்தச் சொல்வதையும் பின்னர் துப்பாக்கியால் சுடுவதையும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.சுடப்பட்ட சிறுவன் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

13 வயதான டோலிடோ ஆயுதம் வைத்திருந்ததாகவும் , 21 வயதான ரூபன் ரோமன் ஜூனியருடன் தப்பி ஓடியதாகவும் சிகாகோ போலீசார் தெர்வித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் துப்பாக்கியை மீட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆடம் சுடப்படுவதற்கு சில நிமிடங்களில் அருகிலுள்ள வேலியின் பின்னால் துப்பாக்கியை வீசி உள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டான்ட் என்ற கருப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவத்தையடுத்து போலீசாரின் அராஜகத்தை விளக்கும் இன்னொரு வீடியோ காட்சியாக இது கடும் சர்ச்சைக்குள்ளானது.

மேலும் செய்திகள்