பொது இடங்களில் இனி முக கவசம் தேவையில்லை -இஸ்ரேல் அறிவிப்பு

பொது இடங்களில் இனி முக கவசம் தேவையில்லை என இஸ்ரேல் நாடு அறிவித்து உள்ளது.

Update: 2021-04-16 11:54 GMT
Image courtesy : MENAHEM KAHANA AFP/File
ஜெருசலேம்

கொரோனாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் சுகாதாரத் துறை அமைச்சர் யுலி எடெல்ஸ்டீன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரசிலிருந்து நம்மை பாதுகாக்க முக கவசங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் பொது இடங்களில் இனி முக கவசம் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மூடிய அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளில் மக்கள் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். வரும் ஞாயிறு முதல் இஸ்ரேலில் பொது இடங்களில் மக்கள் முக கவசங்கள் அணிந்து கொள்ளத் தேவையில்லை” என்று கூறி உள்ளார்.

கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தியதன் காரணமாகவே இந்த நிலையை அடைந்துள்ளோம். தடுப்பூசிகள் பலனளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்