சீன தூதர் - உயர் மட்ட அதிகாரிகள் தங்கி இருந்த பாகிஸ்தான் ஓட்டலில் வெடிகுண்டு தாக்குதல் 5 பேர் பலி

சீன தூதர் - உயர் மட்ட அதிகாரிகள் தங்கி இருந்த பாகிஸ்தான் ஓட்டலில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்று உள்ளது இதில் 5 பேர் பலியானார்கள். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-04-22 06:34 GMT
Image courtesy : AFP
இஸ்லாமாபாத்

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் அமைந்துள்ள நட்சத்திர ஒட்டலில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஓட்டலின் கார் பார்க்கிங் பகுதியில் நடைபெற்ற இந்த வெடி குண்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயம் அடைந்தனர்.

சீன தூதர் உள்பட சீனாவின் உயர் மட்ட அதிகாரிகள் அடங்கிய 4 பேர் கொண்ட குழுவினர் இந்த ஓட்டலில் தான் தங்கியிருந்துள்ளனர். எனினும், குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் சீன தூதர் குறிப்பிட்ட ஓட்டலில் இல்லை என்று கூறப்படுகிறது. இது ஒரு பயங்கரவாத செயல் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித் அகமது தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு நடந்த ஓட்டல் முழுவதும் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்