ஓமனில், தன்னார்வலர்களுடன் இந்திய தூதர் சந்திப்பு; காணொலி காட்சி வழியாக நடந்தது

இந்திய தூதரகத்தின் சார்பில் ஓமன் நாட்டில் தன்னார்வ பணியில் ஈடுபட்டு வரும் இந்தியர்களுடன் காணொலி காட்சி வழியாக சந்திக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-04-24 23:23 GMT
இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் முனு மகவர் தலைமை தாங்கினார். அப்போது அவர் காணொலி காட்சி வழியாக மஸ்கட், நிஸ்வா, சுகர், இப்ரி, சலாலா உள்ளிட்ட ஓமன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமூக பணியில் ஈடுபட்டு வரும் இந்தியர்களுடன் பேசினார்.இந்த சந்திப்பின் போது ஒவ்வொரு பகுதியிலும் இருந்து வரும் கொரோனாவின் தற்போதைய நிலைமை, இதில் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா?, பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் உதவிகள் என்னென்ன? உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். மேலும் இந்திய தூதரகத்தின் சார்பில் எந்த வகையான ஒத்துழைப்புகள் தேவைப்படுகிறது என கேட்டார்.

அப்போது பேசிய தன்னார்வலர்கள், ஓமன் அரசின் சுகாதாரத்துறை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் சிறப்பான வகையில் வழங்கி வருவதாக குறிப்பிட்டனர். மேலும் கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது என குறிப்பிட்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்