பாகிஸ்தானில் 80 சதவீத அரிய வகை உயிரினங்கள் கொல்லப்பட்டு சீனாவுக்கு ஏற்றுமதி

பாகிஸ்தானில் அழிவு நிலையில் உள்ள 80 சதவீத அரிய வகை உயிரினங்கள் கொல்லப்பட்டு சீனாவுக்கு ஏற்றுமதி ஆகின்றன.

Update: 2021-05-07 09:37 GMT
லாகூர்,

பாகிஸ்தான் நாட்டில் அழிவு நிலையில் உள்ள இந்திய எறும்புத்தின்னி விலங்கின் சட்டவிரோத வர்த்தகம், அதன் சூழலியல் மற்றும் பொருளாதார பலன்கள் மற்றும் அவற்றை பாதுகாப்பதற்கான முயற்சிகள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம் ஒன்று நடந்தது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உலக வனவாழ் நிதியத்தின் மூத்த இயக்குனர் ரப் நவாஸ், இந்த வகை உயிரினங்களுக்கு விவசாயிகளால் எப்பொழுதும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.  எனினும் அவற்றின் மேற்புற தடிமனான தோல் மற்றும் இறைச்சி ஆகியவற்றிற்காக சீனாவுக்கு சட்டவிரோத வர்த்தகம் செய்யப்படுகிறது.

இதனால் கடந்த 10 ஆண்டுகளில் அவை பெருமளவில் குறைந்து உள்ளது.  இதனால் 80 சதவீத எறும்புத்தின்னிகளை இழந்து விட்டோம்.  இதுதவிர, பாகிஸ்தானில் 80 சதவீத நன்னீர் ஆமைகளும் சட்டவிரோத கடத்தலால் இழந்து விட்டோம் என கூறியுள்ளார்.

உலகில் வனவாழ் உயிரினங்களின் வர்த்தகமே 3வது மிக பெரும் கருப்பு சந்தையாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.  இதற்கு அபராதம் எதுவும் விதிப்பதில்லை.  ஆனால், சட்டவிரோத சந்தையில் லட்சக்கணக்கான அளவில் கடத்தல்காரர்களுக்கு பணம் கிடைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்