உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 17 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 17 கோடியே அதிகரித்துள்ளது.

Update: 2021-05-30 01:05 GMT
வாஷிங்டன்,

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆணடு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் அலை நிறைவடைந்த நிலையில் பல நாடுகளில் வைரசின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. 

குறிப்பாக, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை புரட்டி எடுத்து வருகிறது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பயன்பாட்டிற்கு வந்துள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் 17 கோடியே 6 லட்சத்து 10 ஆயிரத்து 101 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 44 லட்சத்து 78 ஆயிரத்து 103 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 15 கோடியே 25 லட்சத்து 84 ஆயிரத்து 125 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் இதுவரை 35 லட்சத்து 47 ஆயிரத்து 873 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்,

அமெரிக்கா - 3,40,34,596
இந்தியா - 2,77,29,247
பிரேசில் - 1,64,71,600
பிரான்ஸ் - 56,57,572
துருக்கி - 52,35,978

மேலும் செய்திகள்