இலங்கையில் கனமழை: 14 பேர் பலி; 2.45 லட்சம் பேர் பாதிப்பு

இலங்கையில் கனமழைக்கு 14 பேர் உயிரிழந்து உள்ளனர். 2.45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2021-06-06 17:41 GMT

கொழும்பு,

இலங்கையில் பெய்துள்ள கனமழையால் கொழும்புக்கு 88 கி.மீ. தொலைவில் உள்ள கெகல்லே நகரில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதேபோன்று ரத்னபுரா மாவட்டத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த கனமழைக்கு 2 பேர் காயமடைந்து உள்ளனர்.  2 பேர் காணாமல் போயுள்ளனர்.  800 வீடுகள் சேதமடைந்து உள்ளன.  15,658 பேர் பாதுகாப்பான பகுதிக்கு சென்றடைந்து உள்ளனர்.

வருகிற நாட்களில் 150 மி.மீ. அளவுக்கு பலத்த மழை பெய்ய கூடும்.  கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்பதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கனமழையால் 2.45 லட்சம் பேர் வரை பாதிப்படைந்து உள்ளனர்.  இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்