அமீரகத்தில் 6 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 684 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டது

Update: 2021-06-17 00:05 GMT
அபுதாபி, 

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 684 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதன் முடிவுகளில் 2 ஆயிரத்து 11 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்று 6 லட்சத்து 3 ஆயிரத்து 961 ஆக உயர்ந்தது.

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் மேல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று ஆயிரத்து 976 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தற்போது குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 83 ஆயிரத்து 115 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 4 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,738 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 19 ஆயிரத்து 108 பேர் கொரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்