நவீன வசதிகளுடன் உலகில் 196 அடி ஆழம் உள்ள டீப் டைவ் துபாய் நீச்சல் குளம் திறப்பு

நவீன வசதிகளுடன் உலகில் அதிகம் ஆழம் கொண்ட 196 அடி ஆழ டீப் டைவ் துபாய் நீச்சல் குளம் திறக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-07-08 11:06 GMT
துபாய்

உலகின் மிக ஆழமான நீச்சல் குளமாக விளங்கும் டீப் டைவ் துபாய் திறக்கப்பட்டுள்ளது, இதுகுறித்த  வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளன.

துபாய் இளவரசர் எச்.எச். ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஜூலை 7 ஆம் தேதி டீப் டைவ் துபாய் நீச்சல் குளத்தை திறந்து வைத்தார்.  இது குறித்து அவர் டுவிட்டரில் வீடியோ பகிர்ந்துள்ளார்.

ஆழமான டைவ் துபாயில் 60 மீட்டர் (196 அடி)ஆழத்துடன் ஒரு முழு உலகமும் உங்களுக்காக காத்திருக்கிறது" என்று ஹம்தான் பின் முகமது டுவிட்டரில்  தெரிவித்துள்ளார்.

டீப் டைவ் துபாய் நாட் அல் ஷெபா பகுதியில் அமைந்துள்ளது.  கின்னஸ் உலக சாதனை குழுவால் புடைவிங்கிற்கான உலகின் ஆழமான நீச்சல் குளம் என சரிபார்க்கப்பட்டு உள்ளது, இதனை  துபாய் அரசாங்கத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

சமீபத்திய நவீன தொழில்நுட்பத்தை  கொண்டு  டீப் டைவ் துபாய் நீச்சல் குளம் அமைக்கப்பட்டு உள்ளது. இது  60 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தைக் கொண்டுள்ளது. 1.4 கோடி  லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டது.  குளம் ஒரு மூழ்கிய நகரத்தை போன்று உள்ளது.

ஸ்கூபா டைவிங்கில் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவ சர்வதேச டைவிங் நிபுணர்களின் குழு அங்கு உள்ளது.

 நீருக்கடியில் 56 கேமராக்கள் உள்ளன, அவை குளத்தின் அனைத்து கோணங்களையும் உள்ளடக்கியது. டைவிங் அனுபவத்தை இன்னும் சிறப்பாகச் செய்ய, ஒலி மற்றும் மனநிலை விளக்கு அமைப்புகளும் உள்ளன.

குளத்தின் நீர் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும்  ஒருமுறை  நாசாவால் உருவாக்கப்பட்ட வடிகட்டி தொழில்நுட்பம் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு மூலம் சுத்தபடுத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்