இந்தோனேசியாவில் 2 நாட்களில் இரட்டிப்படைந்த கொரோனா மரணங்கள்

இந்தோனேசியாவில் 2 நாட்களில் கொரோனா மரண எண்ணிக்கை இரட்டிப்படைந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-07-09 04:06 GMT



ஜகார்த்தா,

உலக அளவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளின் வரிசையில் 4வது நாடாக உள்ள இந்தோனேசியாவில் கடந்த 2 நாட்களில் கொரோனா மரண எண்ணிக்கை இரட்டிப்படைந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

அந்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதத்தினர் முழுவதும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.  எனினும், சமீப நாட்களாக தொற்று பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

கடந்த புதன்கிழமை 1,040 பேர் உயிரிழந்து உள்ளனர்.  அதற்கு 2 நாட்களுக்கு முன் இந்த எண்ணிக்கை 558 ஆக இருந்தது.  மறுபுறம் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி மற்றும் வென்ட்டிலேட்டர்கள் பற்றாக்குறை ஆகியவற்றாலும் அவற்றை இறக்குமதி செய்யும் சூழலுக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.

இதுதவிர, கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளாமல் மக்களில் பலர் வீடுகளிலேயே உயிரிழந்து வருகின்றனர் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.  இதனால் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் சரியான கொரோனா பாதிப்புகள் மற்றும் மரணங்கள் பதிவாகவில்லை என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

டெல்டா வகை கொரோனா அதிதீவிரமுடன் பரவி வரும் சூழலானது தடுப்பூசிகளற்ற நிலையில் மக்கள் தவிப்பதுடன், அந்நாட்டின் சுகாதார அமைப்பிலும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்