சூடானில் ‘ஸ்போர்ட்ஸ் கிளப்' ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பு: 4 பேர் உடல் சிதறி பலி

சூடானில் ‘ஸ்போர்ட்ஸ் கிளப்' ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 4 பேர் உடல் சிதறி பலியாகினர்.

Update: 2021-07-11 22:52 GMT
கோப்புப்படம்
கார்தோம், 

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானின் கிழக்கு பகுதியில் அல்-அமீன் நகரிலுள்ள ‘ஸ்போர்ட்ஸ் கிளப்' ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். 

இந்த குண்டுவெடிப்புக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்