நேபாளத்தின் புதிய பிரதமராக ஷெர் பகதூர் தேவ்பாவை நியமிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் தேவ்பாவை நியமித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-07-12 11:19 GMT
காத்மாண்டு,

நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் தேவ்பாவை நியமித்து  சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டுள்ளது. 2 நாட்களில் ஷெர் பகதூர் தேவ்பாவை நேபாள பிரதமராக நியமிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கலைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் நியமிக்க வேண்டும் என்றும் அந்நாட்டு ஜனாதிபதிக்கு நேபாள சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 கேபி சர்மா ஒலி பரிந்துரையின் படி பாராளுமன்றத்தின் கீழ் சபையை கலைத்தது அரசியலமைப்பிற்கு விரோதமான செயல் என்றும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. நேபாள சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு கம்யூனிஸ்ட் தலைவரான கேபி சர்மா ஒலிக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி பரிந்துரையை ஏற்று 275- உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்ற கீழ் சபையை ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி கலைத்து உத்தரவிட்டார். மே 22 ஆம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், நவம்பர் 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், மேற்கண்ட உத்தரவை நேபாள சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது. 

மேலும் செய்திகள்