ஆப்கானிஸ்தானில் தலீபான்களுடன் மோதல்; மாகாண துணை கவர்னர் படுகொலை

ஆப்கானிஸ்தானில் கபீசா மாகாண துணை கவர்னர் தலீபான்களுடனான மோதலில் இன்று கொல்லப்பட்டு உள்ளார்.

Update: 2021-07-16 16:29 GMT


காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகள் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த 20 ஆண்டுகளுக்கும் கூடுதலான இந்த போரில், அவர்களை ஒடுக்க அரசு ராணுவ வீரர்களை பயன்படுத்தி வருகிறது.

தலீபான்களை அடக்குவதற்காக ராணுவம் தாக்குதல் நடத்துவதும், ராணுவத்தினர் மீது தலீபான்கள் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்துவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் கந்தகாரில் நடத்தப்பட்ட தலீபான்களின் தாக்குதலில், புலிட்சர் பரிசு வென்ற இந்தியாவை சேர்ந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்பட செய்தியாளர் தனிஷ் சித்திக் மரணம் அடைந்துள்ளார்.

இந்நிலையில், கபீசா மாகாணத்தில் நிஜ்ரப் மாவட்டத்தில் இன்று நடந்த தலீபான்களுடனான மோதலில் துணை கவர்னர் அஜீஸ் உர் ரகுமான் தவாப் கொல்லப்பட்டு உள்ளார்.  இதனை போலீசார் தெரிவித்து உள்ளனர்.



மேலும் செய்திகள்