ஆப்கானிஸ்தான் தூதரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது- பாக்.வெளியுறவு அமைச்சகம்

பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2021-07-17 20:21 GMT
Photo Credit: AFP
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதராக இருப்பவர் நஜீப் அலிகில். இவரது மகளான 26 வயதான சில்சிலா அலிகில் ஜின்னா சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். சுமார் 7 மணி நேரம் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்ட அவர் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது நஜீப் அலிகில்.மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தானில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. நஜீப் அலிகில் கடத்தப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதரையும் நேரில் அழைத்து முறையான புகாரையும் ஆப்கானிஸ்தான் அரசு இவ்விவகாரம் தொடர்பாக அளித்துள்ளது. 

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ அலிகில் தாக்கபட்ட சம்பவம் குறித்து ஆப்கானிஸ்தான் அரசு எங்களுக்கு தகவல் அளித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் தூதரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை அடுத்த 48 மணி நேரத்தில் கைது செய்ய இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்