இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன

இங்கிலாந்தில் திங்கள் கிழமை முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

Update: 2021-07-19 00:49 GMT
லண்டன்,

இங்கிலாந்து கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மருத்துவ நிபுணர்கள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இருப்பினும் தடுப்பூசிகள் வந்த பிறகு கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ளதாக இங்கிலாந்து அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

இரவு நேர கிளப்கள், உள் அரங்கு கூட்டங்கள் ஆகியவை எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிதல் மற்றும் வீட்டில் இருந்தபடியே பணியாற்றுவதற்கான சட்ட ரீதியான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன

. பொதுமக்கள் விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன், தடுப்பூசி போட்டுக்கொள்வதிலும் சுணக்கம் காட்டக்கூடாது என்று தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்