இலங்கையில் வேகமாக பரவும் டெல்டா வைரஸ்- பயண கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு அறிவுறுத்தல்

இலலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது

Update: 2021-07-19 22:30 GMT
கொழும்பு, 

கொரோனா வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருகிறது. இதில் முக்கியமான மாறுபாடான டெல்டா, இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் இது பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. மிகவும் வேகமாக பரவும் திறன் பெற்ற இந்த வைரஸ் தற்போது இலங்கையில் வேகமாக பரவுவது கண்டறியப்பட்டு இருக்கிறது. குறிப்பாக காலே, மட்டாரா போன்ற தெற்கு மாவட்டங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற வடக்கு மாவட்டங்களிலும் அதிகமாக பரவுவதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இதைப்போல கொழும்புவில் தினந்தோறும் கண்டறியப்படும் புதிய கொரோனா தொற்றுகளில் 25 முதல் 30 சதவீதம் பேர் டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் கண்டறியப்பட்டு இருக்கிறது. கொரோனாவின் 3-வது அலையில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு இந்த டெல்டா தொற்று மிகுந்த சவாலாக மாறி இருக்கிறது. 

அங்கு தினமும் 1000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், சுமார் 50 மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன. எனவே கடந்த மே மாத தொடக்கத்தில் இருந்து அமல்படுத்தப்பட்டு இருக்கும் பயண கட்டுப்பாடு விலக்கலை ரத்து செய்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறு அரசுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்