நியூசிலாந்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவு

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.

Update: 2021-07-25 19:23 GMT
கெர்மடெக்,

நியூசிலாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள கெர்மடெக் தீவுகளில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.

மேலும் செய்திகள்