கலிபோர்னியாவில் காட்டு தீ: 12க்கும் மேற்பட்ட வீடுகளை தீக்கிரையாக்கியது

அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியாவில் மிகப் பெரிய அளவில் காட்டுத் தீ பரவியது. இந்த காட்டுத்தீ முழுவதும் பரவி 12க்கும் மேற்பட்ட வீடுகளை தீக்கிரையாக்கியது.

Update: 2021-07-26 10:17 GMT
வாஷிங்டன்,

கடந்த ஜூலை 24ஆம் தேதி, அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியாவில் மிகப் பெரிய அளவில் காட்டுத் தீ பரவியது. காட்டுத் தீயின் தீவிரத் தன்மை கலிபோர்னியா மாகாணத்தை புரட்டி போட்டுள்ளது.

கடந்த ஜூலை 14ஆம் தேதி, பரவ தொடங்கிய காட்டுத் தீ, இந்தியன் பால்ஸ் முழுவதும் பரவி 12க்கும் மேற்பட்ட வீடுகளை தீக்கிரையாக்கியது.

சமீபத்திய சேத அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், ப்ளூமாஸ் மற்றும் பட் பகுதிகளில் 1 லட்சத்து 81 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

தொலைத்தூர பகுதிகளில் தீ பரவி வருவதாகவும் அங்கு அதனை அணைப்பதற்கு போதுமான வசதிகள் இல்லை என்றும் அலுவலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கிழக்கு நோக்கி தீ பரவிவருவதால் தீயணைப்பு வீரர்களின் முயற்சிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அலுவலர்கள் கூறுகின்றனர்.

இதனால், அல்மனோர் ஏரி கரைகளில் மீட்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பரவிவரும் 85 காட்டுத் தீ 1.4 மில்லியன் ஏக்கர் நலங்களை தீக்கிரையாக்கியுள்ளது.

மேலும் செய்திகள்