டெல்டா வகை கொரோனா ஆதிக்கம்: சிட்னியில் மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் டெல்டா வகை கொரோனா பரவியுள்ளது.

Update: 2021-07-28 08:16 GMT
சிட்னி,

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் டெல்டா வகை கொரோனா பரவியுள்ளது. இதனால், அங்கு தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டில் ஒருமாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. இதனால், மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கு சிட்னி நகரில் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறுகையில், "ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 26ஆம் தேதி,  உள்ளூர் பரவலால் 12 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது. இதையடுத்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இதையடுத்து, டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவந்துள்ளது. இன்று மட்டும் 177 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்