உகான் நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சீனா முடிவு

உகான் நகரில் உள்ளூர் பரவல் மூலம் 7 பேருக்கு கொரோனா பரவல் மீண்டும் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-08-03 10:34 GMT
Photo Credit: AFP
உகான்,
  
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின்  உகான்  நகரில் கொரோனா பரவல் கண்டறியப்பட் டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவி, கடந்த 2 ஆண்டுகளாக அடுத்தடுத்து கொரோனா அலைகள் உருவாகி கொண்டிருக்கின்றன.

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அந்த நாட்டு அரசு கூறிவந்த நிலையில் ஜியாங்சூ, செச்சுவான், லியானிங், ஹூனான், ஹூபெய் உள்ளிட்ட 5 மாகாணங்களில் தற்போது  வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்த மாகாணங்களில் வைரஸ் பரவலைகட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் பெய்ஜிங் உட்பட 13 நகரங்களிலும் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது.

உகான் நகரிலும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், அந்நகரில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும்   கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சீன அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்