ஆஸ்திரேலியா; மெல்போர்ன் நகரில் ஊரடங்கு நீட்டிப்பு

தொற்று பாதிப்பு குறைய மறுப்பதால் மெல்போர்ன் நகரில் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-16 05:24 GMT
மெல்போர்ன்,

கொரோனா வைரசின் முதல் அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா தற்போது 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. அங்கு அதிக மக்கள் தொகை கொண்ட நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் விக்டோரியா மாகாணங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. 

குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் 7 வாரங்களாக கடுமையான ஊரடங்கு அமலில் உள்ள போதும் அங்கு வைரஸ் பரவலின் வேகம் குறையவில்லை. நேற்று ஒரே நாளில் சிட்னியில் 7 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.  தொற்று பாதிப்பு குறைய மறுப்பதால் மெல்போர்ன் நகரில் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்