அஷ்ரப் கனி அரசு பணம் ரூ.1255 கோடியை திருடிவிட்டார் - ஆப்கானிஸ்தான் தூதர்

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அரசு பணத்தில் இருந்து 169 மில்லியன் டாலர் பணத்தை திருடிவிட்டார் என அந்நாட்டு தூதர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2021-08-19 00:41 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலீபான் பயங்கரவாதிகள் நுழைந்ததையடுத்து அதிபர் அஷ்ரப் கனி தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்மடைந்துள்ளார்.

இதற்கிடையில், அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்செல்லும்போது மூட்டை மூட்டையாக பணத்தை எடுத்து சென்றதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானை விட்டு தப்பிச்செல்லும்போது 169 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 1255 கோடி ரூபாய்) அரசு பணத்தை திருடி சென்றுவிட்டதாக தஜிகிஸ்தான் நாட்டிற்கான ஆப்கானிஸ்தான் தூதர் முகமது ஜாகீர் அக்பர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், சர்வதேச போலீஸ் அஷ்ரப் கனியை கைது செய்யவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்