உலக நிலவரம்: 21.14 கோடியைக் கடந்த கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21.14 கோடியாக உயர்ந்து உள்ளது.

Update: 2021-08-21 04:06 GMT
Image courtesy : Shutterstock.com
ஜெனீவா

 கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது.   கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத்தொடங்கியுள்ளது. 

டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. 

உலகம் முழுவதும் இதுவரை 21.14 கோடிக்கும் மேற்பட்டோருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 44.27  பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 189,299,434 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 7,826,336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 17,717,256 பேர் லேசான தொற்று அறிகுறிகளுடனும், 109,080 பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்