இலங்கையில் முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலி

இலங்கையில் முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

Update: 2021-08-24 20:54 GMT
கொழும்பு, 

இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தவர் மங்களா சமரவீரா. 65 வயதான அவருக்கு இந்த மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. உடனே அவர் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு பலியானார்.

மங்களா சமரவீரா, கடந்த 2005-2007 மற்றும் 2015-17 ஆகிய காலகட்டங்களில் 2 முறை வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பு வகித்துள்ளார். ஒரு முறை நிதி மந்திரியாகவும் இருந்துள்ளார்.

இலங்கையில் கொரோனாவுக்கு பலியான 2-வது பெரிய அரசியல் தலைவர் இவர் ஆவார். இதற்கு முன்பு முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் லோகுபந்தரா கொரோனாவால் இறந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகள்