ஜப்பானில் அமலில் உள்ள அவசர நிலை பிரகடனம் மேலும் நீட்டிப்பு

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக ஜப்பானின் 21 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-08-25 05:18 GMT
டோக்கியோ,

பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் நேற்று ஒரேநாளில் 21,500 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 34 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், ஜப்பானில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.2% என்ற அளவில் உள்ளது. ஆனாலும், கடந்த சில நாட்களாக அந்நாட்டில் உருமாறிய டெல்டா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஜப்பானில் அமலில் உள்ள அவசரநிலை பிரகடனம் வரும் 27-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் அந்த கட்டுப்பாடுகள் செப்டம்பர் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் 21 மாகாணங்களில் தேசிய அவசரநிலை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்