கஜகஸ்தானில் வெடிமருந்து கிடங்கில் வெடிவிபத்து; 14 பேர் பலி

கஜகஸ்தானில் வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2021-08-30 01:05 GMT


அல்மடி,

கஜகஸ்தான் நாட்டின் தெற்கே ஜாம்பில் பகுதியில் ராணுவ கிடங்கு ஒன்று அமைந்து உள்ளது.  இந்த நிலையில், 10 முறை இந்த கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது.  இந்த சம்பவத்தில் 14 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.

இதேபோன்று 3 பேரை காணவில்லை.  அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.  உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என அவசரகால சூழ்நிலைக்கான அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்