நேபாளத்தில் கனமழை நிலச்சரிவில் 6 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Update: 2021-09-03 08:43 GMT
காட்மாண்டு

ஆண்டுதோறும் மழைக்காலங்களில்  நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு  பேரழிவுகள் காரணமாக அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

நேபாளத்தில்  பருவமழை மீண்டும் தொடங்கி உள்ளது இதனால் பலவேறு பகுதிகளில் மழைபெய்து வருகிறது.

மேற்கு நேபாளம் பார்பட் மாவட்டத்தில்  கனமழை பெய்து வருகிறது, அங்கு  ஏற்பட்ட நிலச்சரிவில் 8க்கும் மேற்பட்டோர்  மண்ணில் புதைந்தனர். இதில் 6 பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து போலீசார் கூறும் போது   திடீரென ஏற்பட்ட கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது இதில் சிலர் மண்ணில் புதைந்தனர். தற்போது வரை 6 பேர் உடலகள் மீட்கப்பட்டு உள்ளது.2 பேர்  மாயமாகி உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்