சீனாவில் வறட்சி நிலை; 15 லட்சம் மக்கள் பாதிப்பு

சீனாவில் ஏற்பட்டு உள்ள வறட்சி நிலையால் 15 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2021-09-07 10:46 GMT









பீஜிங்,

சீனாவில் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் உலக நாடுகளுக்கு தெரிய வந்தது.  இந்த நிலையில், அந்நாட்டில் கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது.

கடந்த ஜூலையில் இருந்து காணப்படும் இதுபோன்ற காலநிலையால், 15.10 லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர்.  60 ஆயிரம் ஹெக்டேர் அளவிலான பயிர்கள் அனைத்தும் சேதடைந்து உள்ளன. 

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மாகாணத்தில் கடந்த ஆண்டுகளை விட 14 சதவீதம் குறைவான மழை பொழிந்துள்ளது.  இதன் எதிரொலியாக வறட்சி நிலையானது செப்டம்பரிலும் தொடரும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது என மாகாண வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.



மேலும் செய்திகள்