அமெரிக்காவில் 16 ஆயிரம் கொரோனா பலிகள் பதிவாகவில்லை; ஆய்வில் அம்பலம்

கொரோனா தொற்றால் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவுகள் கூறுகின்றன.

Update: 2021-09-11 21:12 GMT
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை கொரோனா தொற்றால் 6 லட்சத்து 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவுகள் கூறுகின்றன. 

இந்தநிலையில் அங்கு ஆஸ்பத்திரிகளில் கொரோனாவால் இறந்த 16 ஆயிரம் பேரின் இறப்புகள் பதிவு செய்யப்படவில்லை என்ற ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை வெளியிட்டிருப்பவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் கரன் ஷென் ஆவார். இவரது ஆய்வில், 20 மாகாணங்களை ஆராய்ந்ததில் அங்கெல்லாம் 44 சதவீத கொரோனா பாதிப்புகளும், ஆஸ்பத்திரிகளில் நேரிட்ட 40 சதவீத இறப்புகளும் மாகாண சுகாதார துறைகளில் பதிவு செய்யப்பட்டும், தேசிய தரவுகளில் சேர்க்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்