அமெரிக்காவில் 57,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
அமெரிக்காவில் 57,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
வாஷிங்டன்,
உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 57,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 4.28 கோடியாக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் 630 பேர் உயிரிழந்து உள்ளனர். மொத்த உயிரிழப்பு 6,91,348 ஆக உயர்வடைந்து உள்ளது.
இதேபோன்று பிரேசிலில் ஒரே நாளில் 22,789 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மொத்தம் 2.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அந்நாட்டில் ஒரே நாளில் 764 பேர் உயிரிழந்து உள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 90 ஆயிரத்து 508 ஆக உயர்வடைந்து உள்ளது.