நோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி கேட்கும் சீரம் நிறுவனம்

அவசர பயன்பாட்டுக்காக நோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி கேட்டு உலக சுகாதார அமைப்பிடம் சீரம் நிறுவனம் மனு அளித்துள்ளது.

Update: 2021-09-23 19:15 GMT
கோப்புப்படம்
லண்டன், 

இந்தியாவின் சீரம் நிறுவனமும், அமெரிக்காவின் நோவோவேக்ஸ் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை தயாரித்து உள்ளன. கொரோனாவுக்கு எதிராக இந்த தடுப்பூசி 90 சதவீத செயல்திறனை கொண்டிருப்பதாக கடந்த ஜூன் மாதம் இந்த நிறுவனங்கள் அறிவித்து இருந்தன.

இந்த தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி கேட்டு உலக சுகாதார அமைப்பிடம் மேற்படி நிறுவனங்கள் மனு செய்துள்ளன. சர்வதேச தடுப்பூசி பகிர்வு திட்டத்தின் கீழ் இந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கும் எனவும் அந்த நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.

மற்ற தடுப்பூசிகளை ஒப்பிடுகையில் நோவோவேக்ஸ் தடுப்பூசியை எடுத்து செல்வதும், சேமித்து வைப்பதும் எளிது என்பதால், ஏழை நாடுகளுக்கு அதிக டோஸ்கள் கிடைப்பதில் இந்த தடுப்பூசி முக்கிய பங்காற்றும் என இந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.


மேலும் செய்திகள்