ஜப்பானில் ரிக்டர் 6.1 அளவில் நிலநடுக்கம்

ஜப்பானின் வடமேற்கு கரையோரம் ரிக்டர் 6.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2021-09-30 02:05 GMT
டோக்கியோ,

எரிமலை வளையம் அல்லது பசிபிக் எரிமலை வளையம் (Pacific Ring of Fire) என்பது பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்துள்ள அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை கொந்தளிப்பு ஏற்படும் பகுதியாகும். உலகின் 90% நிலநடுக்கங்களும் 81% பெரிய நிலநடுக்கங்களும் இப்பகுதியிலேயே ஏற்படுகின்றன. கடல் சூழ்ந்த தீவு நாடான ஜப்பான், இந்த பசிபிக் எரிமலை வளையத்தில் அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

இந்த நிலையில் ஜப்பானின் வடமேற்கு கடலோர பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்