உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23.45- கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 23.45 கோடியாக உயர்ந்துள்ளது.

Update: 2021-10-01 01:37 GMT
ஜெனீவா, 

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வியாபித்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கும் கோடிக்கணக்கானோரை பாதித்த கொரோனா, பல லட்சம் உயிரையும் காவு வங்கியிருக்கிறது. 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் தற்போது உலகம் முழுவதும் முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகின்றது. இதனால், தொற்று பரவல் கணிசமாக கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 உலக அளவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 கோடியே 45 லட்சத்து 25 ஆயிரத்து 061- ஆக உயரந்துள்ளது.  தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47 லட்சத்து 96 ஆயிரத்து 408- ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை 21 கோடியே 13 லட்சத்து 28 ஆயிரத்து 498- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,84,00,155- ஆக உள்ளது. 

மேலும் செய்திகள்