நவம்பர் மாதம் முதல் எல்லைகள் திறப்பு அமெரிக்க அறிவிப்பு

இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்காக நவம்பர் மாதம் முதல் எல்லைகள் திறக்கப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

Update: 2021-10-13 10:16 GMT
வாஷிங்டன்,

கொரோனா முதல் அலை பரவலிலிருந்தே அமெரிக்கா கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்தது. அதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அந்நாட்டின் தரைவழி எல்லைகள் மூடப்பட்டன. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா மற்றும் இதரப் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் நவம்பர் மாதம் முதல் அமெரிக்க நாட்டின் தரைவழி எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. எனினும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் அமெரிக்க எல்லைகளைத் திறக்கக் கோரி விடுத்து வந்த கோரிக்கைகள் தற்போது நிறைவேறியுள்ளது.

மேலும் செய்திகள்