43 ஆயிர தவறான கொரோனா முடிவுகள் வழங்கிய பரிசோதனை மையம்!

இங்கிலாந்தில் 43000 பேருக்கு தவறான கொரோனா முடிவுகள் வழங்கிய தனியார் பரிசோதனை மையம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-15 12:26 GMT
லண்டன்,

மத்திய இங்கிலாந்தில் உள்ள ஒரு தனியார் கொரோனா பரிசோதனை மையமானது தவறான முடிவுகளை வழங்கியுள்ளது. அதாவது கடந்த அக்டோபர் 12 வரை 43,000 பேருக்கு இந்த மையத்தால் தவறான முடிவுகள் வழங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. 

இதனால் இந்த மையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்கள் மீண்டும் ஒரு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்படி அந்நாட்டு அரசு கூறியுள்ளது,

தவறான கொரோனா முடிவுகளால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ள நிலையில் அரசானது, தவறு செய்த பரிசோதனை மையத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும் தவறான முடிவுகள் ஏற்பட காரணம் என்ன என்பது பற்றி சம்மந்தப்பட்ட தனியார் பரிசோதனை மையத்திடம் விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் செய்திகள்