இந்திய நீர்மூழ்கி கப்பலை பாகிஸ்தான் தடுத்து நிறுத்தியதா?

கடந்த 16 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையாதவாறு இந்திய நீர்மூழ்கிக் கப்பலை தங்கள் நாட்டு கடற்படை தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் நேற்று கூறியது.

Update: 2021-10-20 11:03 GMT
கராச்சி,

கடந்த 16 ஆம் தேதி  பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையாதவாறு இந்திய நீர்மூழ்கிக் கப்பலை  தங்கள் நாட்டு கடற்படை தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் நேற்று கூறியது. 

ஆனால், இந்திய நீர்மூழ்கிக் கப்பல்கள் இருந்ததாகக் கூறப்படும் இடம், பாகிஸ்தான் கடல் எல்லைக்கு அப்பால் அமைந்துள்ளது என கடல்சார் செயல்பாடுகள் குறித்து விவரமறிந்தவர்கள்  தெரிவித்துள்ளனர். 

மேலும்,  பாகிஸ்தானின் கூற்று  நம்பத்தகுந்த தகவல் அல்ல எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்"பாகிஸ்தான் கடல் பகுதியிலிருந்து 12 கடல் மைல் தூரம் வரை அந்நாட்டின் கடல் எல்லை நீண்டுள்ளது.  

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இருந்ததாகக் கூறப்படும் இடம், கராச்சி துறைமுகத்திலிருந்து 150 கடல் மைல் தூரத்தில் உள்ளது. இது, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள எல்லை பகுதிக்கு அப்பால் அமைந்துள்ளது" என்றனர்.  பாகிஸ்தான் கூறியது பற்றி இந்திய கடற்படை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் வெளியிடவில்லை. 

மேலும் செய்திகள்