காங்கோ நாட்டில் மர்ம நோய்; 165 குழந்தைகள் உயிரிழப்பு

காங்கோ நாட்டில் மர்ம நோய் தாக்குதலுக்கு 165 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2021-10-21 15:15 GMT



கின்ஷாசா,

காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் தென்மேற்கில் குவிலு மாகாணத்தில் குங்கு என்ற நகரில் கடந்த ஆகஸ்டில் முதன்முறையாக மர்ம நோய் ஏற்பட்டு உள்ளது.  இதன்பின்னர் அடுத்தடுத்து பரவியதில் 165 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.

அவர்களில் 5 வயதுக்கு உட்பட்டபவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  அவர்களுக்கு மலேரியா போன்ற அறிகுறிகள் தென்பட்டு உள்ளன.  இதுதவிர, ரத்த சோகை ஏற்படுத்த கூடிய பாதிப்புகளும் குழந்தைகளிடம் காணப்படுகின்றன.  அதுபற்றி எதுவும் எங்களுக்கு தெரியவில்லை என்று ஜீன் பியர்ரி பசாகே என்ற சுகாதார அதிகாரி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்