பணக்கார நாடுகள் பட்டியல் - அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம்!

உலக பணக்கார நாடுகள் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்துள்ளது.

Update: 2021-11-16 12:41 GMT
புதுடெல்லி,

உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகள் பட்டியலை மெக்கின்ஸ்க்கி அண்ட் கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 20 ஆண்டுகளில் உலக செல்வ வளம் மும்மடங்கு உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.

உலகின் 60 சதவீத வருவாயை கொண்டுள்ள டாப்-10 நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது.

2000ம் ஆண்டில் 7 டிரில்லியன் டாலர்களாக இருந்த சீனாவின் பொருளாதார வளம், தற்போது 120 டிரில்லியன் டாலர்களாக அபார வளர்ச்சியடைந்துள்ளது. மற்றொரு புறம், அமெரிக்காவின் பொருளாதார வளம்  90 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

இவ்விரு நாடுகளிலும் மூன்றில் இரண்டு பங்கு செல்வத்தை அந்நாட்டின் பெரும் பணக்காரர்களே வைத்துள்ளனர். ரியல் எஸ்டேட் துறை அதீத வளர்ச்சி அடைந்துள்ளது என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்