பர்கினோ பசோ: பயங்கரவாதிகள் தாக்குதல் - 49 ராணுவ வீரர்கள் உள்பட 53 பேர் பலி

பர்கினோ பசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 53 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-11-18 16:24 GMT
ஒவ்கடங்கு:

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், அந்நாட்டின் இடானா நகரில் தங்கச்சுரங்கம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு படையினரின் சோதனைச்சாவடி உள்ளது. இந்த சாவடியில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அந்த சோதனைச்சாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் முகாமில் இருந்த ராணுவ வீரர்கள் 49 பேர் உயிரிழந்தனர். மேலும், பொதுமக்களில் 4 பேர் உயிரிழந்தனர். 

இதனால், ராணுவ சாவடியில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   

மேலும் செய்திகள்