இந்தோனேசியா எரிமலை வெடிப்பு; உயிரிழப்பு 34 ஆக உயர்வு

இந்தோனேசியா எரிமலை வெடிப்பில் உயிரிழப்பு 34 ஆக உயர்வடைந்து உள்ளது. 169 பேர் காயமடைந்து உள்ளனர்.

Update: 2021-12-07 16:23 GMT


ஜகர்த்தா,

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் செமேரு எரிமலை அமைந்துள்ளது.  3,676 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலையில் இருந்து கடந்த 4ந்தேதி லேசாக புகை கிளம்பியது.  இதன்பின்பு எரிமலை வெடித்து, சாம்பல் புகை வான்வரை சென்று காற்றில் கலந்தது.

இந்த எரிமலை வெடிப்பிற்கு அருகேயிருந்த வீடுகள் சேதமடைந்தன.  பாலம் ஒன்றும் சேதமடைந்து உள்ளது.  ஒருவர் உயிரிழந்த நிலையில், 41 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது என உள்ளூர் ஊடகங்களின் முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்தோனேசியா எரிமலை வெடிப்பில் உயிரிழப்பு 34 ஆக உயர்வடைந்து உள்ளது.  169 பேர் காயமடைந்து உள்ளனர்.  17 பேரை இன்னும் காணவில்லை.  இதுவரை 3,700 பேர் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  3 ஆயிரம் வீடுகள் சேதமடைந்து உள்ளன.

இதனை தொடர்ந்து சம்பவ பகுதிக்கு ஜனாதிபதி ஜோகோ விடோடோ சென்று பார்வையிட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் மக்களுக்கு உறுதி வழங்கினார்.

மேலும் செய்திகள்