பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பெண் குழந்தை..!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்-கேரி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.;

Update:2021-12-09 21:50 IST
கோப்பு படம்
லண்டன்,

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி கேரிக்கு லண்டன் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. தாய் மற்றும் சேய் நலமுடன் இருப்பதாக தம்பதியின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

மூன்று திருமணங்களை செய்துகொண்ட 57 வயதான போரிஸ் ஜான்சனுக்கு இது ஆறாவது குழந்தையாகும்.  முதல் மனைவி அலெக்ரா மோஸ்டின்-ஓவனுக்கு குழந்தைகள் இல்லை. போரிஸ் ஜான்சன் மெரீனா வீலர் என்ற வக்கீலை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன. 

இந்த நிலையில் போரிஸ் ஜான்சன் மூன்றாவதாக 33 வயதான கேரியை திருமணம் செய்துள்ளார். கேரிக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் குழந்தை பிறந்தது. இந்நிலையில்  போரிஸ் ஜான்சன்- கேரி தம்பதிக்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

மேலும் செய்திகள்