அமெரிக்கா: 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைப்பு

கூடுதலாக 50 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது அமெரிக்கா.

Update: 2021-12-26 04:36 GMT
வாஷிங்டன்,   

அமெரிக்க அரசால் பாகிஸ்தானிய மக்களுக்கு கூடுதலாக 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன.இது குறித்து அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

அமெரிக்க அரசால் கோவாக்ஸ் முயற்சியின் ஒரு பகுதியாக கூடுதலாக 50 லட்சம் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி டோஸ்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், அமெரிக்க அரசால் பாகிஸ்தானிய மக்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 3 கோடியே 70 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும், கொரோனா கால நிதியாக 6 கோடியே 94 லட்சம் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தானுக்கு அளித்து உதவியுள்ளது அமெரிக்கா.

உலகம் முழுவதும் 30 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை அமெரிக்கா வழங்கி உள்ளது. 

இவ்வாறு அமெரிக்க தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “தடுப்பூசி செலுத்தி கொள்வதே மிகச் சிறந்த பரிசாக அமையும்” என்று அமெரிக்க தூதரகத்தின் இஸ்லாமாபாத் பொறுப்பாளர் ஏஞ்சலா பி அகெலெர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்